நேரலை
/
NFNEWSFELT
சினிமா

ஏவி. மெய்யப்பன் | தெரிந்த பிரபலம் தெரியாத பின்புலம்!

Newsfelt Admin15 ஜூலை, 20264 நிமிட வாசிப்பு
பகிர்:

AVM – என்ற முத்திரையைப் பார்த்தவுடன் பாடுபட்டு முன்னணிக்கு வந்த ஏவி. மெய்யப்பன் அவர்கள் நினைவிற்கு வருவார். அவர்தம் பிள்ளைகள் ஏவி.சரவணன், ஏவி.எம்.பாலசுப்ரமணியன், பேரன் குகன் ஆகிய வாரிசுகளும் சின்னத் திரையில் நிமிடமும் நீங்காத தொடர்காட்சித் தொடர்களைத் தந்து அவர்தம் கலையை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

திரைவானில் ஏவி. எம். சகாப்தம் என்று சொல்லும் விதமாகப் பரிமளித்த அவர்தம் உழைப்பையும் மற்ற செய்திகளையும் தெரிந்து கொள்வோம்.

1930களில் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக வளரப் பாடுபட்டார்.

தாமும் காலூன்றி மற்றக் கலைஞர்களையும் மிளிரச் செய்த பெருமை ஏவிஎம்முக்கு உண்டு.

பாடக நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நகைச்சுவையில் டி.ஆர்.ராமச்சந்திரன் கவர்ச்சிக் கன்னி குமாரி ருக்மிணி, நாட்டியப் பேரொளி குமாரி கமலா… இவர்களைத் தவிரவும் வெள்ளித் திரை இயக்குநர்கள் டி.டி.கிருஷ்ணஸ்வாமி, எம்.வி.ராமன், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.சங்கர் மற்றும் பலர் ஏவி.எம்.மால் முன்னுக்கு வந்தனர். ஏவி.எம்மின் தந்தை முதலில் சிறு பல்பொருள் அங்காடி ஆரம்பித்தார். பேசாத சினிமா (ஊமைப் படம்) வெளிவந்த அந்த நாட்களில் வீடுகளில் சிறிதளவு மின் வசதிதான் இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. கிராமஃபோன் பெட்டி எனப்படுபவைகளில் சிறிய உலோக ஊசியின் மூலம் ஒலி வரச் செய்து பாட்டு கேட்பார்கள்.

ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் (HMV), கொலம்பியா, ஹட்சின்ஸ், ட்வின் போன்ற கம்பெனிகளுடன் ஃபோனோக்ராப் ரெகார்ட்ஸ் என்ற கிராம்போன் ப்ளேட்ஸ் என்று பெற்றவைகளைத் தயாரித்தார்.

மெய்யப்பன் பதின்ம பருவத்திலேயே தந்தையின் உதவியாளராயிருந்தார். விற்பனைத் தொழிலை மேற்கொள்வதுடன் கிராமஃபோன் பிளேட்டுகளைத் தாமே தயாரித்தார். ஸரஸ்வதி ஸ்டோர் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததும் பல துறையில் பெரிய மனிதர்கள் அதன் முன்னேற்றத்துக்கு ஊக்கமளித்தனர். ஓடியன் என்ற பெயருடன் பரிமளித்த ஸரஸ்வதி ஸ்டோர் பல விதமான இசைத் தட்டுகளைத் தயாரித்துப் புகழ் பெற்றது.

‘அன்பே வா’ படப்பிடிப்பில் அப்படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். படத்தின் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன், அவருடைய மகன் சரவணன். மூவருமே காலத்தில் கலந்தனர்.


பேசும் படம் : திரையுலகில் அடுத்த முன்னேற்றம். அதில் கவனம் செலுத்தினார் ஏவிஎம். பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு நந்தகுமார் என்ற படம் எடுக்கப்பட்டது. லலிதா வெங்கடராமன் என்ற வாய்ப்பாட்டு இசை மேதையைக் கொண்டு பின்னணிக் குரல் பாடல் சொல்லிப் படமெடுத்தார். முதன் முதல் தமிழ்த் திரையுலகில் பின்னணி இசை எடுக்கப்பட்டது. அந்தப் புகழாரம் மெய்யப்பனுக்கே உரித்ததாகும்.

1938ல் எடுக்கப்பட்ட நந்தகுமார் மெய்யப்பனுக்குப் புகழ் தந்தது. நடிகர் பாடகர் மகாலிங்கத்துக்கும் விடிவெள்ளியாய் அமைந்தது. நகைச்சுவைக்கு டி.ஆர்.ராமச்சந்திரன்.

ஒரே காட்சியில் மூன்று கதைகள். வாயாடி, போலிபாஞ்சாலி, ஆமாம் ஆமாம் (எஸ்.எஸ்) என்று புதுவிதமாக சினிமா எடுத்தார். எடுத்த மொழி ஒன்று, பின்னணி இசை போல் வசனம் வேறு வேறு மொழிகளில் என்று வரும்போது நடிப்பும், உதட்டசைவும் வேறுபட்டு தனித்து நின்றன.

ஹரிச்சந்திரா என்ற தமிழ்ப் படத்தில் பி.யூ.சின்னப்பாவும் கண்ணாம்பாவும் நடித்தனர். அது `டப்’ (பின்னணிக் குரல் கொடுத்து) செய்து தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இந்தப் புகழும் ஏவிஎம்மையே சாரும்.

இம்மாதிரி பல சாதனைகள் செய்துவந்த அவரைப் பற்றி நாம் இருவர் படத்தைப் பார்த்த தலைமுறையினர் நன்கு அறிவார்கள். அதன்பிறகு அவர் புகழேணியில் மேலே மேலே ஏறிக் கொண்டேயிருந்தார். அவரது 150வது படம் மாநகர காவல்.

ஏவிஎம்மின் 50வது ஆண்டு விழாவில் மின்சாரக் கனவு என்று முத்திரை பதித்த அவரது தடங்களை அவரது வாரிசுகள் தந்தையின் முழு உழைப்பையும் உணர்ந்து அதே விதத்தில் வளர்க்கின்றனர். மக்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதில் சான்றோராக விளங்குகின்றனர். அமரர் மெய்யப்பன் ஆனந்தம் அடைவார்.

1979ல் அமரரான அவரை வருடா வருடம் ஆகஸ்ட் 12-ல் நினைவில் கொள்வோம்.

- டி.என்.லட்சுமி

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது...

தொடர்புடைய கட்டுரைகள்