சென்சார் பாராட்டு பெற்ற 'தி டார்க் ஹெவன்' | பிக் பாஸ் புகழ்பெற்ற சித்து நடித்திருக்கிறார்!
-600x406.webp%3F2026-09-13T18%253A47%253A17.373Z&w=3840&q=75&dpl=dpl_8CnHFnbPr2GEPJiytP1DKwDR1MSh)
'D3' பட இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. தணிக்கைக் குழுவினரின் பாராட்டுடன் எந்தவொரு வெட்டும் (Cuts) இன்றி தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 18 அன்று திரைக்கு வருகிறது.
📌 முக்கிய அம்சங்கள்:
நட்சத்திரப் பட்டாளம்: பிக் பாஸ் புகழ்பெற்ற சித்து (துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில்), தர்ஷிகா (சக்திவாய்ந்த மனைவி கதாபாத்திரத்தில்), ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட அனுபவ நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு - மணிகண்டன் பிகே, படத்தொகுப்பு - ராஜா ஆறுமுகம், இசை - சக்தி பாலாஜி, பாடல் வரிகள் - லாவர்தன்.
படப்பிடிப்பு: திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், தென்காசி ஆகியவற்றின் இதுவரை திரையில் காட்டப்படாத புதிய நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீடு காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட இத்திரைப்படம், தற்போது செப்டம்பர் 18-ல் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு முழுமையான த்ரில்லர் அனுபவத்தைத் தரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தபோது படத்தின் நாயகன் சித்து உணர்வு பொங்க பேசியதாவது: "இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். இந்த விழா நடக்கும் இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் . அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது.
இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் . அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது. எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும். எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள். அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.
படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள். இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்"என்றார்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



