ரெப்போ வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றமில்லை! | கண்களை விரித்துக் காத்திருக்கும் ஆர்பிஐ
தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் தெரியாமல் நீங்கள் எந்தவொரு கடனையும் வாங்குவீர்கள் என்றால் உங்களை எப்படி புத்திசாலி என்பது?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்திய நாணயக் கொள்கை அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், அது 5.25 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இந்த நிலைப்பாட்டை மத்திய வங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய காலத்திற்கு கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதமாகும். இதன் மாற்றம் நேரடியாக வீட்டு கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வட்டிகளையும் பாதிக்கும். எனவே, இந்த விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது, கடன் வாங்கியவர்களுக்கு உடனடி சுமை அதிகரிக்காத நிலையை உருவாக்குகிறது.
மேலும், பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, விலை நிலைத்தன்மையையும் பராமரிக்க இந்த ‘status quo’ முடிவு உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
