’ஹைவான்’ (Haiwaan) - மீண்டும் ஒரு பரபரப்பான க்ரைம் த்ரில்லருடன் பிரியதர்ஷன்!
18 வருடங்களுக்குப் பின் சயீப் அலிகானும் அக்ஷய் குமாரும் மீண்டும் ஒரே படத்தில்..

‘ஒரு மர்மம்... ஒரு துரத்தல்... ஒரு தீர்க்கப்படாத கணக்கு’ - இந்த மூன்று வரிகளில் ‘Haiwaan’ படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்துகிறது வெளியாகியுள்ள டீசர். பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், சைஃப் அலி கான், சாயாமி கெர், ஸ்ரியா பில்கான்கர், போமன் இரானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘Haiwaan’ படத்தின் கதையின் மையத்தில் பார்வையற்ற ஒருவரும், அவர் காப்பாற்றத் துடிக்கும் சிறுமியைக் கொல்ல அவளைத் துரத்தும் ஒருவனையும் பற்றிய கதை. பார்வையற்றவரைச் சுற்றி நிகழும் கொலையும் மர்மமும் ப்ரியதர்ஷன் பாணி த்ரில்லர் திரைக்கதை. சைஃப் அலி கான் பார்வையற்ற தற்காப்புக் கலைஞராக நடிக்கிறார். அவருக்கு எதிரான இருண்ட கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் தோன்றுகிறார். தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள டீசர் இருவரின் மோதலையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், மர்மத்தைத் தக்கவைத்துள்ளது. டீசரைக் காணும் பார்வையாளர்களை திரையரங்குக்கு இழக்க முயல்கிறது.
முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘Haiwaan’ 2016-ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய மலையாளப் படமான ‘ஒப்பம்’ (Oppam) படத்தின் இந்தி மறு ஆக்கம். ஆனால் இது காட்சிக்கு காட்சி எடுக்கப்பட்ட ரீமேக் அல்ல. திரைக்கதை, வசனங்கள் உள்ளிட்டவற்றில் வட இந்திய ரசிகர்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரியதர்ஷனே தெரிவித்துள்ளார். மேலும் ‘Oppam’ படத்தில் நாயகனாக நடித்த மோகன்லால் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘Oppam’- படத்தின் அடிப்படைக் கதையில், தனது கூர்மையான செவிப்புலன், மோப்ப உணர்வு மற்றும் தொடு உணர்வை பயன்படுத்தி ஆபத்தை எதிர்கொள்ளும் பார்வையற்ற ஒருவரைச் சுற்றி கதை நகரும். ‘Haiwaan’ அந்த மையத்தை பாலிவுட்டின் இரண்டு வலிமையான நடிகர்கள் மற்றும் புதிய திரைமொழியுடன் மீண்டும் சொல்ல வருகிறது.
இந்தி பதிப்பு தமிழிலும் வெளியாகவிருப்பதால், பிரியதர்ஷனின் த்ரில்லர் உலகத்தை தமிழ் ரசிகர்களும் திரையரங்கில் காண முடியும். இப்போதைக்குப் படத்தின் டீசரை காணுங்கள்.
ஹைவான் ட்ரைலரைக் காண
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
தொடர்புடைய கட்டுரைகள்
