தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வரவிருக்கும் மாநில பட்ஜெட் தாக்கல், அதில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நடைபெறும் வழக்கமான ஆலோசனைக் கூட்டம் இதுவொரு என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும் நிலவி வரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மைச் சூழல் (Financial Bleeding) குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மக்கள் வரிப்பணம் மற்றும் மாநிலத்தின் வருவாய் முழுமையாக, சரியான வழியில் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக, ஒவ்வொரு துறையிலும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தொடர்ந்து நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்" என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...