தமிழ்நாட்டை நோக்கி வரும் ‘எல் நினோ’ விளைவு! | சீனா மற்றும் வட மாநில பெருவெள்ளங்கள் முதல் அலாரம்!
இந்தியாவைப் பொருத்தவரை எல்நினோ தென்மேற்கு பருவமழையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள நிலையில், எல்நினோவின் இலக்கு மாநிலங்களில் தமிழ்நாடும் தப்ப முடியாது என்பதே தற்போதைய நிலை.

உலக உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ அடிப்படை மழையே ஆகும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களின் வாழ்வாதாரத் திற்கு மிகவும் முக்கியமானது மழை. “மாரியல்லாது காரியமில்லை” என ஒளவையாரும், “மழையே உணவாகவும் பயன்படுகிறது”என திருவள்ளுவரும் மழையின் பெருமையைக் குறிப்பிடுகின்றனர். விவசாயத்திற்கு மழைதான் மிக முக்கிய ஆதாரவளம். ஒர் இடத்தின் பயிர்த்திட் டங்களையும் சாகுபடி முறைகளையும் தீர்மானிப்பது மழையென்றால் மிகையாகாது. பெய்யும் மழையின் அளவு, இடஅமைவு, பருவ காலம் போன்ற காரணிகளால் மாறுபடுகிறது. மேலும் காலநிலை மற்றும் கடல்மட்ட வெப்பநிலையின் வேறுபாடுகளாலும் மழை பொழிவில் மாற்றம் ஏற்படலாம். தற்காலத்தில் ‘எல்நினோ’ என்னும் நிகழ்வினாலும் மழை அளவில் மாற்றம் உண்டாவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எல்நினோ என்பது வானியல் மாற்றங் களால் உருவாகும் ஒரு நிகழ்வாகும். இது பசிபிக் பெருங்கடலில் நீண்ட கால சராசரி அளவை விட கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சற்று அதிகமாவதால் ஏற்படுகிறது. தென் அமெரிக்க கண்டத்தின் பெரு, பிரேசில் ஆகிய நாடுகளை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த சிறிய வெப்பநிலை உயர்வால் (சுமார் அரை டிகிரி செல்சியஸ் அளவு கூட) வளிமண்டலத்தில் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதனால் வெப்பக்காற்று மேல் நோக்கி, அந்நாடுகளின் பாலைவனங்களில் மழையை ஏற்படுத்துகிறது. மேலும் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலிலிருந்து சூடான கடல் நீரும் இடம்பெயருகிறது.இந்த எல்நினோ நிகழ்வு வழக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் டிசம்பர் மாதத்தில் வருவதால் “சிறுவன்” என்று பொருள்படும் விதத்தில் அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வு கிழக்கு நோக்கி இந்தியா நகர்ந்து வந்ததில் தற்போது வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம் மற்றும் குஜராத் (சூரத்), மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 20 நாள்களில் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது அசாமில் பிரம்மபுத்திரா நதி பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளச் சேதம். இதனால் அருணாசல பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 70க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 400 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மேலும் குஜராத்தின் சூரத் நகரம், குறிப்பாக உனா போன்ற பகுதிகளில் கடுமையான மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் நிகழ்வு நடப்பு ஜூலையில் பேசுபொருளாகியுள்ளது. தவிர தொடர் மேகவெடிப்புகளால் ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் மகாராஷ்டிராவின் மும்பை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தீவிர மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தேசிய ஊடகங்களில் முக்கியச் செய்திகளாகின.
எல்நினோ விளைவு இந்தியாவின் பல மாநிலங்களில் பெய்யும் மழையளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்நினோ உலகளவிலும் இந்தியாவிலும் வறட்சி, பஞ்சம், வெள்ளம் போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கிழக்கு பசிபிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மழை ஏற்படுகிறது. 1876-ம் ஆண்டு உலகில் பல பகுதிகளில் கடும் வறட்சியையும், சீனாவில் பெரும் பஞ்சத்தையும் உண்டாக்கியது. 2010-ம் ஆண்டு வட அமெரிக்காவில் கடும் பனிப்புயல் மற்றும் சூறாவளி ஏற்படவும் காரணமாக அமைந்தது. இந்தியாவைப் பொருத்தவரை எல்நினோ தென்மேற்கு பருவமழையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ளது.
மேலும்,மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதி யில் அமைந்துள்ளதால் மழை மறைவுப் பிரதேசம் என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவம் (ஜீன் - செப்டம்பர்), வடகிழக்குப் பருவம் (அக்டோபர் - டிசம்பர்), குளிர்காலம் (ஜனவரி - பிப்ரவரி) மற்றும் கோடை காலம் (மார்ச் - மே) ஆகிய நான்குமழைப் பருவங்கள் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தின் ஆண்டு சராசரி மழையளவு 925.0 மி.மீ ஆகும். இவற்றில் அதிகமாக வடகிழக்குப் பருவத்தில் 438.7 மி.மீ (47.4 சதவீதம்) மழை பெய்கிறது. எல்நினோ நிகழ்வு தமிழ்நாட்டு மழையளவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய 1961 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐம்பது வருட ஆண்டு சராசரி மற்றும் வடகிழக்கு மழையளவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லேசான, மிதமான, வலிமையான எல்நினோ வருடங்களில் தமிழகத்தில் அதிகம் (20க்கு மேல்), வழக்கமாக(+19.9) மற்றும் குறைவான (-19.9க்கு கீழ்) என்ற அளவுகளில் மழை விபரம் பற்றி ஆராயப்பட்டது.ஆய்வுக்குட்பட்ட ஐம்பது ஆண்டுகளில் 17 வருடங்களில் எல்நினோ நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் லேசான நிகழ்வு 5 வருடங்களிலும் (1969, 1976, 1977, 2004, 2006) மிதமான எல்நினோ 7 வருடங்களிலும் (1963, 1968, 1986, 1991, 1994, 2002, 2009) வலிமையான எல்நினோ 5 வருடங்களிலும் (1965, 1972, 1982, 1987, 1997) நிகழ்ந்துள்ளது என வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.ஆய்வு முடிவுகளின் படி தமிழகத்தில் லேசான எல்நினோ வருடங்களில் 60 சத வருடங்களில் வழக்கமான மழையும், 40 சதவருடங்களில் அதிகமான மழையும் பெய்துள்ளது.

மிதமான எல்நினோ வருடங் களில் 86 மி.மீ. வழக்கமாக மற்றும் 14 மி.மீ.குறைவான மழையும் பெய்துள்ளது. இதுபோல வலிமையான எல்நினோ வருடங் களில் வழக்கமான 60 மி.மீ. ஆண்டுகளில் குறைவான மற்றும் அதிகமான மழைப் பொழிவு 20 மி.மீ. வருடங்களில் பெய்துள்ளது. மொத்தஎல்நினோவை கணக்கிடும்போது வழக்கமாக, அதிகம் மற்றும் குறைவான மழையளவுகள் முறை என்ஐ 70-18 மற்றும் 12 சதவீதமாக உள்ளது. எனவே இனிவரும் எல்நினோ வருடங் களில் பொதுவாக வழக்கமான மழை பெய்யலாம்.வடகிழக்குப் பருவமழையை பொருத்த வரை லேசான எல்நினோ வருடங்களில் 60 மி.மீ. வழக்கமான மழையும் 40 மி.மீ. அதிகமான மழையும் பெய்தது. மிதமான எல்நினோ காலங்களில் 57 மி.மீ. வழக்க மான மழைபொழிந்துள்ளது.
வலிமையான எல்நினோ வருடங்களில் 60 மி.மீ. ஆண்டு களில் அதிகமான மழைப் பதிவாகியுள்ளது.மேலும் மொத்த எல்நினோ வருடங்களில் வழக்கமான மற்றும் அதிகமான மழைப்பொழிவு முறையே 47 மற்றும் 35 மி.மீ. வருடங்களில் பெய்தது என கண்டறியப் பட்டது. எனவே எல்நினோ காலங்களில் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வழக்கமான மற்றும் அதிகமான அளவில் வடகிழக்குப் பருவமழை பெய்யக்கூடும். நிகழும் 2014ம் ஆண்டு எல்நினோ நிகழ்வு ஏற்பட சாத்தியக் கூறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது உறுதி செய்யப்படும் பட்சத்தில் எல்நினோ விளைவால் தமிழ்நாட்டிற்கு ஆண்டு மழை யில் வழக்கமான மழையும், வடகிழக்கு பருவத்தில் வழக்கமான அல்லது அதிகமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 15 வருடங்களில் இந்த ஆய்வு மந்த கதியில் நடந்து வருகிறது. செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் வெளியாகவில்லை.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது...