சாய்ரா - பிஸ்மி | இரண்டு புதுமுகங்கள்!
இது புதுமுகத் திறமைகளின் காலம். ஒரு புதுமுக இயக்குநர் - நாயகன், மற்றொருவர் புதுமுக நாயகி.. இவர்களின் பின்புலம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்..

தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்கள் தங்களின் கதைகளில் நம்பிக்கை வைத்து நேரடியாக நாயகர்களாகக் களம் இறங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கவனம் ஈர்க்கும் முயற்சியாக உருவாகி வருகிறது ‘ஹலோ மிஸ்’. நமஹா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் என். குமார்லால் நேரு தயாரிக்கும் இந்தப் படத்தை சாய்ரா எழுதி, இயக்கி, நாயகனாகவும் அறிமுகமாகிறார். ஒரு வலுவான கதையுடன் தன்னை நிரூபிக்க முனையும் இந்த முயற்சி, புதிய தலைமுறை படைப்பாளிகளின் தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
இப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சம், பிஸ்மி என்ற இஸ்லாமியப் பெண் கதாநாயகியாக அறிமுகமாகும் நிகழ்வு. இன்னும் சவால்களால் சூழப்பட்ட சமூகச் சூழலில், இப்படியான வரவு குறிப்பிடத்தக்க மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கலாம். மேலும் பிஸ்மியின் தோற்றமும் அவரது வசீகரமும் அவரை விரைவான முன்னேற்றத்தைத் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம். சாய்ரா - பிஸ்மி ஆகிய அறிமுகங்களோடு கே.எஸ். ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இணையும் இந்தப் படம், புதிய முயற்சிக்கும் வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.
சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஹலோ மிஸ்’, காதல் மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. பிரின்ஸ் ஜார்ஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானதும், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. புதிய முகங்களும் புதிய எண்ணங்களும் இணையும் இந்த முயற்சி, வெற்றிப் பாதையை தொடுமா என்பதே தற்போது சினிமா வட்டாரத்தின் எதிர்பார்ப்பு.
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…
தொடர்புடைய கட்டுரைகள்
