/
NFNEWSFELT
சினிமா

தமிழ் சினிமா தயாரிப்பில் லண்டன் நிறுவனம்!

‘வட்டக்கானல்’ திரைப்படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். துஷாந் கதாநாயகனாக நடிக்கிறார்.

Newsfelt Admin4 அக்டோபர், 20261 நிமிட வாசிப்பு
பகிர்:

லண்டனைச் சேர்ந்த டன்ஸ்டன் இன்டர்நேஷனல் (Dunstan International) நிறுவனம் தனது புதிய தமிழ்த் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தில் நிறுவனத்தின் நிறுவனர் துஷாந் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘வட்டக்கானல்’ திரைப்படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார். இவரது வித்தியாசமான திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட தயாரிப்புக் குழு, இப்படத்திற்கான இயக்குநராக அவரைத் தேர்வு செய்துள்ளது.

பிரம்மாண்டமான களத்தில், மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்