/
NFNEWSFELT
சினிமா

பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்' | ஓர் அட்டகாச அறிமுகக் காணொலி!

படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள், தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பக் கலையின் முறையான அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Newsfelt Admin19 செப்டம்பர், 20262 நிமிட வாசிப்பு
பகிர்:

விக்ரமும் பார்வதி திருவோத்தும் இணைந்து நடித்த ‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைமொழியில் 'வேட்டுவம்' என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார். லேர்ன் அண்ட் டெக் (Learn and Teach Production) நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன் தயாரித்துள்ளது.

இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் 'World of Vettuvam'  கணொலி, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.  அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக் ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள 'வேட்டுவம்', பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. தனித்துவமான திரைவெளியை அறிமுகப்படுத்தும் இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளையும் வலுவான ஆக் ஷன் கதைக் களத்தையும் கொண்டுள்ளதாக இக்காணொலியில் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள், தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பக் கலையின் முறையான அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆக்ஷன் காட்சிகளுக்கு இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்கியுள்ளனர்.

ஆர்யா, லப்பர் பந்து தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் ஆகியோர் நடித்துள்ள இப்படம், பான் இந்தியப் படமாக  5 மொழிகளில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் எஸ்.எஸ். மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திரைக்கதையை எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளார். வசனம் - ப்ராங்ளின்.  ‘World of Vettuvam' காணொலி மூலம் இப்படத்தின் தனித்துவமான உலகம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘World of Vettuvam' காணொலியை காண இணைப்பில் செல்லுங்கள்

வேட்டுவம் திரை வெளி அறிமுக விழா


.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்