‘பாவை’ பட டிரைலர்: பதின்ம வயதினருக்கு ஓர் எச்சரிக்கை!

செப்டம்பர் 18 திரையரங்க வெளியீட்டை நோக்கி வரும் ‘பாவை’ படத்தின் டிரைலர், சமூகத்தில் மறைந்திருக்கும் ஓராயிரம் உண்மைகளில் ஒன்றி வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. பள்ளியில் பயிலும் பதின்ம வயதின் காலம் என்பது மனதளவி முதிர்ச்சியடையாத, முடிவெடுக்கத் தெரியாத உணர்ச்சிகளின் வயது. அந்த நேரத்தில் காதல் என்ற பெயரில் அணுகும் ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைவது எப்படிப்பட்ட மோசமான படுகுழிகளில் தள்ளிவிடும் என்பதை ‘பாவை’ படத்தின் இந்த டிரைலர் வெளிப்படுத்துகிறது
கதாநாயகி ‘பாவை’, ஆயிரமாயிரம் பாவைகளின் அடையாளமாகத் திகழ்கிறாள். அவளின் வலியும், சமூகத்தின் மௌனமும், இந்தப் படத்தின் வழியாக வெளிப்படப்போகிறது. டிரைலர், ஒரு தனிப்பட்ட கதையை மட்டும் அல்லாமல், பல பெண்களின் அனுபவங்களைச் சுமக்கும் குரலாகத் தோன்றுகிறது.
இந்தப் படம், பொழுதுபோக்கு என பார்க்கப்படாமல், சமூக விழிப்புணர்வை நோக்கி அழைப்பு என அணுகப்பட வேண்டும். பாவையின் குரல், ஆயிரம் பாவைகளின் வலியை வெளிப்படுத்தும் போது, அது எவ்வாறு திரையில் பிரதிபலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
‘பாவை’ படத்தை இயக்கியிருப்பவர் ராகுல் விக்னேஷ். தயாரிப்பாளர் காந்தி மணிவாசகம். இசையமைப்பில் செந்துரன்- எம். எஸ். அனோஷ் இணைந்து பணியாற்றியுள்ளனர். காட்சியமைப்பில், விக்னேஷ் சக்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தலைப்பைத் தாங்கும் பெண் மையக் கதாபாத்திரத்தில் முல்லையரசி என்கிற தமிழ்ப் பெண்ணே நடித்திருக்கிறார். இவர்களுடன் நிரஞ்சனா நெய்தியார், சிம்பு KPS, மதவன் S ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இணைப்பில் சென்று டிரைலரைக் காணுங்கள் : ’பாவை’ படத்தின் டிரைலர்
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…



