/
NFNEWSFELT
உலகம்

ஏஐ (AI) யாருடைய வேலைகளை விழுங்கும்? உலகளவில் தீவிரமான விவாதம்!

செயற்கை நுண்ணறவி அதன் வளரும் வேகத்தால் உலகின் பல கோடி மக்களின் வாழ்வில் சிக்கலைக் கொண்டு வந்தே தீருமா?

Newsfelt Admin23 ஆகஸ்ட், 20262 நிமிட வாசிப்பு4 பார்வைகள்
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை முழுமையாக மாற்றிவிடும் என்ற டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் ( Elon Musk) கூற்று உலகளவில் மீண்டும் தீவிரமான விவாதத்தை கிளப்பியுள்ளது. “எதிர்காலத்தில் வேலை என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம்போல் மாறும்” என்ற அவரது கணிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைந்து இப்போது நடைமுறை கேள்வியாக மாறியுள்ளது.

சமீப கால தரவுகள், மஸ்கின் இந்த கூற்றுக்கும் வேலை பறிபோகும் என்ற  அச்சத்திற்கும் ஓரளவு ஆதரவாகவேப் பார்க்கப்படுகின்றன. உலகளவில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் போது, அதற்கு ஏஐ பயன்பாடு ஒரு காரணமாக குறிப்பிடப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. 2023க்குப் பிறகு 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏஐ மாற்றங்களுடன் தொடர்புடையதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆரம்ப நிலை (entry-level) ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ அதிகமாக பாதிக்கப்படுகின்றன என்பது கவலைக்குரிய விடயம். சில நிபுணர்கள், அடுத்த சில ஆண்டுகளில் இத்தகைய வேலைகளில் 50% வரை குறைவு ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.

ஆனால் இதற்கெதிராகவும் கருத்துகள் உள்ளன. ஏஐ வேலைகளை முற்றிலும் அழிக்காது; மாறாக, வேலைகளின் தன்மையை மாற்றும் என பல பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வுகள், கோடிக்கணக்கான வேலைகள் மறைந்தாலும் அதே சமயம் புதிய திறன்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என கூறுகின்றன.

இந்த நிலையில், இந்தியா போன்ற மக்கள் அதிகம் கொண்ட நாடுகளில், “ஏஐ வளர்ச்சி வேலைவாய்ப்பை சுருக்குமா அல்லது மாற்றுமா?” என்ற கேள்வி அரசியல், கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் முக்கிய விவாதமாக உருவெடுத்து வருகிறது.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்