/
NFNEWSFELT
சினிமா

ஊருக்குள் வெளியாட்கள் வரத் தடை! | உண்மையை அம்பலப்படுத்தும் ‘பனங்காட்டான்’

Newsfelt Admin14 செப்டம்பர், 20262 நிமிட வாசிப்பு5 பார்வைகள்
பகிர்:

விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகன் புதிதாக எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘பனங்காட்டான்’. ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தர்.என் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து இயக்குநர் கூறும்போது:

“தென் மாவட்டத்தில் பிரபலமான ஒரு ஊரில் நடந்த தற்போது நடந்து வரும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் திரைக்கதை எழுதினேன். இயக்கியுள்ளேன். ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர். அது என்ன மாதிரியான கட்டுப்பாடும், அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த ‘பனங்காட்டான்’ பாலமேடு, தூத்துக்குடி, ராமநாதபுரம், மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம், விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்