/
NFNEWSFELT
சினிமா

தி பாரடைஸ் விமர்சனம் | நாயக வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்ட மக்கள் புரட்சி

விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து எழும் நாயகன் என்ற பரிச்சயமான கட்டமைப்பு எப்போதும் ஈர்க்கக்கூடியது. நானிக்கு அந்த அடையாளம் பொருந்தியிருக்கிறது.

Newsfelt Admin25 செப்டம்பர், 20266 நிமிட வாசிப்பு
பகிர்:

தெலங்கானாவில் சமீபத்தில் மறைந்த சில மக்கள் கலைஞகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு ‘தி பாரடைஸ்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு தொடங்குகிறது. குறிப்பாக தெலங்கானா புரட்சிக் கவிஞர் கும்மடி வித்தல் ராவ் (கத்தார்) நினைவுகூரப்படுகிறார். இதன்மூலம் இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது மண்ணுக்கும் அதன் அரசியல் - சமூக நினைவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் மக்களின் மண்ணின் இயக்குநராக தன்னைக் காட்ட விரும்புவது இந்த ஆஞ்சலியின் வழியாக நம்மை படத்துக்குத் தயார்படுத்துகிறது.
இதற்குமுன் நானி - ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி ‘தசரா’ படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்திருந்தது.

அப்படத்தில் தெலங்கானா நிலக்கரி சுரங்கப் பின்னணியில் சாதி அரசியலை, மதுப்பழக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு படுகுழியில் தள்ளியது என்கிற நுணுக்கமான கவனிப்பை திரைக்கதைக்குள் முதன்மைப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஸ்ரீகாந்த். அப்படத்தின் மைய உணர்ச்சியாக, நட்பு, இழப்பு, பழிவாங்குதல் ஆகிய உணர்வுகளை இணைத்து, பிரம்மாண்டக் காட்சி அனுபவத்துடன், நானியின் கடும் உழைப்பும் சேர்ந்தபோது தசரா கொண்டாட்டம்போல் மாறியிருந்தது இக்கூட்டணியின் முந்தைய படம். இவர்களது இரண்டாவது முயற்சியாக வந்திருக்கும் ‘தி பாரடைஸ்’ வெளிட்யீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து முளைத்து எழும் நாயகன் என்ற பரிச்சயமான கட்டமைப்பு ரசிகர்களை எப்போதும் ஈர்க்கக்கூடியது. நானியைப் பார்த்தால் ‘பார்ன் இன் சில்வர்ஸ்பூன்’ போல் தெரிந்தாலும், நடிப்பின் வழியாக ‘பாய் அட் நெக்ட் டோர்’ போல் மாறிக்காட்டும் நானிக்கு அப்படியொரு விளிம்புச் சமூக நாயகன் அடையாளம் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறது. அதேநேரம் திரைக்கதை உள்ளே வைத்திருப்பதோ, அந்த நாயகனின் அடையாளம் அடையாள அரசியல். அவனுடைய சமூகத்தின் வாக்குரிமை, வாக்குரிமை இருந்தபோதிலும் ஒதுக்கப்பட்டோரின் வாழ்வியல் நெருக்கடி போன்ற யதார்த்தங்களை விரித்துக் காட்சிகளாக்கியிருக்கிறது.

அதேபோல் ஒரு சமூகத்தை அடக்கியே வைக்க நினைக்கும் அதிகார மையத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழும் புரட்சி என்ற கதை இந்திய வெகுஜன சினிமாவுக்கு புதியதல்ல.


1980களின் செகந்தராபாத் நகரத்தில் ‘பாரடைஸ்’ என்ற பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீகாந்த் ஒடேலாவின் சினிமேட்டிக் யுனிவர்ஸ், படத்தில் மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. சாய் ஒளிப்பதிவில் கருமேக - மஞ்சள் நிறத் தோற்றங்கள், கழுகுகள் - காகங்கள் போன்ற சின்னங்கள், ஒரு டிஸ்டோப்பிய உலகத்தின் அழுத்தத்தை உருவாக்குகின்றன. அதேவேகத்துடன் நம்மை கதை நடக்கும் வரலாற்றுக் காலத்துடன் நம்மை உணர்வுபூர்வமாக இணைக்கவும் செய்கிறது. ஆனால், தர்க்க ரீதியாக செகந்தராபாத் நகர மையத்தில் வாழும் ‘சவாரி’ இன மக்கள் எப்படிப் பல ஆண்டுகளாக அதிகார மையத்தின் கவனத்திற்கு வராமல் போகிறார்கள் என்ற கேள்விக்கு படத்தில் பதில் இல்லை. ‘பாரடைஸ்’ பிரியாணி, லிபர்டி கஃபே போன்ற நகர அடையாளங்கள் காட்டப்பட்டாலும், அந்த சமூகத்தின் வரலாறு மற்றும் அவர்கள் அனுபவிக்கும் துயரம் நம்மை கற்பனை என உணரவைக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் கர்ப்பிணி பெண் தலைமையில் சவாரி மக்கள் தங்கள் அடையாளத்திற்காக போராட்டம் நடத்தும் காட்சி, காட்சியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த மக்களை ஒடுக்கியே வைக்க நினைக்கும் வில்லன் சிகன்ஜா மாலிக் (மோகன் பாபு) அறிமுகமும், அந்த பெண்ணின் மீது நிகழும் கொடூர வன்முறையும் நமக்கு அதிர்ச்சியைக் கடத்துகின்றன.


ஜடால் ஆக வரும் நானியின் சிறுவயது காட்சிகள் அப்படியே நென்சில் டாட்டூ வரைந்ததுபோல் ஒட்டிக்கொள்கின்றன. அவை தரும் உற்சாக உணர்வு ஜாடல் குறித்து மனதுக்குள் நம்பிக்கையாக மாறுகிறது. அவர் தனது உடற்கட்டமைப்பில் செய்துள்ள மாற்றம், கதாபாத்திரத்திற்காக ஒரு நாயக நடிகர் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது வியப்பூட்டுகிறது. ஆனால், திரைக்கதை சவாரி மக்களின் துயரமும் அவர்களின் போராட்டமும் உண்மையிலிருந்து எழாமல் கற்பனையாகச் சுருங்கிவிட்டதில் நானியின் அபாரா உழைப்பு ஓரளவுக்கே படம் தரும் திரை அனுபவத்துக்கு உதவியிருக்கிறது. ஒரு நாயகியான, சோனாலி குல்கர்ணியின் யதார்த்தமும் அழகும் சேர்ந்த நடிப்பு கடைசிவரை ஈர்ப்பதால் அவரது கதாபாத்திரம் முழுமையாக இல்லாதபோதும் அந்தக் குறை நம்மை தொந்தரவு செய்யவில்லை.


படத்தில் பல துணைக் கதாபாத்திரங்கள் சுவாரசியம் கூட்டுகின்றன. என்றாலும் ஒட்டுமொத்த திரையில் அவற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது. கயாது லோஹரின் கதாபாத்திரத்துடன் இணைக்கப்பட்ட ‘பட்டாம்பூச்சி’ சின்னம் பொருளற்றதாக இருந்தபோதும் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் திரைவெளியில் அவை சுவாரசியம்தான். நவீன காலத்தில் தீர்வு காண முடியாது. கே. சந்திரசேகர ராவ், என்.டி. ராமராவ் போன்ற அரசியல் நிழல்களை நினைவூட்டும் கேமியோ கதாபாத்திரங்கள் திரைக்கதை தொய்ந்து விழும் இடங்களில் ஆக்ஸிஜன் கொடுத்திருக்கின்றன.


இடைவேளைக்கு முன் வரும் காட்சி, ‘ஆயா ஷேர்’ பாடல், நானி-சோனாலி உரையாடல் போன்ற சில தருணங்களில் மட்டும் படம் சுவாரஸ்யத்தை தக்க வைத்துக் கொள்கிறது. அனிருத் ரவிச்சந்தரின் இசை படத்துக்கு பலமே.

படத்தின் மிகப்பெரிய குறை அதன் அதீத வன்முறை. உடல் உறுப்புகள் துண்டிக்கப்படும் காட்சிகள், மின்சாரம் ஷாக் கொடுக்கும் கொடூரங்கள் போன்றவை அதிர்ச்சியைத் தருகின்றன. வன்முறையை எந்த வடிவிலும் நாம் அங்கீகரிக்க முடியாது. வன்முறையின் மீது எந்த மக்கள் புரட்சிக்கும் இந்த
தன் சமூகத்தை சுயமரியாதையுடன் வாழ வைக்க விரும்பும் ஒருவன் - அவனுக்கு எதிர்திசையில் அரசியல் அதிகாரத்தை நோக்கும் இன்னொருவன் ஆகியோருக்கு இடையிலான வலுவான மோதலாக படம் அமைந்திருக்கிறது.

அதீத வன்முறை என்பதைத் தவிர ஸ்ரீகாந்த் - நானி கூட்டணி ‘தசரா’வின் உணர்வில் இந்த 1980களின் செகந்தராபாத் களத்தில் நம்மை நடமாட வைக்கும் முயற்சியில் பாதிக் கிணறு தாண்டியிருக்கிறார்கள். வன்முறையை விரும்பாதவர்கள் இந்தப் படத்தை தவிர்த்துவிட்டு, பிரம்மாண்ட காட்சி அனுபவத்தை விரும்புகிறவர்கள் தாராளமாகப் படத்தைப் பார்க்கலாம்.

மதிப்பெண் 3.2 / 5

பகிர்:

கருத்துகள் (0)

கருத்திட உள்நுழையுங்கள்.

ஏற்றுகிறது…

தொடர்புடைய கட்டுரைகள்